• May 10 2026

மன்னாரில் பனை மரத்துடன் மோதிய மினி பஸ்; வேலைக்குச் சென்ற 9 தொழிலாளர்கள் காயம்

Chithra / May 10th 2026, 1:54 pm
image

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற  விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.


இந்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர். 


விபத்தில் சிக்கிய 9 பேரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்து தொடர்பில் தலைமன்னார் மற்றும் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


​பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அன்றாட வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


மன்னாரில் பனை மரத்துடன் மோதிய மினி பஸ்; வேலைக்குச் சென்ற 9 தொழிலாளர்கள் காயம் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற  விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.இந்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர். விபத்தில் சிக்கிய 9 பேரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் தலைமன்னார் மற்றும் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.​பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அன்றாட வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement