• Dec 03 2024

பாராளுமன்ற உணவகத்தில் உண்ணமாட்டோம் என்று கூறவில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுப்பு..!

Sharmi / Dec 2nd 2024, 9:01 am
image

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு எடுக்க மாட்டோம் என்றோ அல்லது அரச வாகனங்களில்  செல்லமாட்டோம்  என்றோ கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் பாராளுமன்றத்திற்கு வந்த முதல் நாளிலிருந்தே பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் நல்ல உணவை பொதுச் சந்தையில் நிலவும் விலைக்கே வழங்க வேண்டும் என தெரிவித்ததாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த 2000ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு வந்த போது ஒரு சாப்பாடு 15 ரூபாவிற்கு விற்கப்பட்டது.

அத்துடன் கடந்த 2004 , 2005 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் விலையை அதிகரிக்க வேண்டும் என அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும், அந்த உணவுகள் சாதாரண விலையில் வழங்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் கட்சி கூறுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



பாராளுமன்ற உணவகத்தில் உண்ணமாட்டோம் என்று கூறவில்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க மறுப்பு. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு எடுக்க மாட்டோம் என்றோ அல்லது அரச வாகனங்களில்  செல்லமாட்டோம்  என்றோ கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தாம் பாராளுமன்றத்திற்கு வந்த முதல் நாளிலிருந்தே பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் நல்ல உணவை பொதுச் சந்தையில் நிலவும் விலைக்கே வழங்க வேண்டும் என தெரிவித்ததாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.அதேவேளை, கடந்த 2000ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு வந்த போது ஒரு சாப்பாடு 15 ரூபாவிற்கு விற்கப்பட்டது.அத்துடன் கடந்த 2004 , 2005 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் விலையை அதிகரிக்க வேண்டும் என அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அமைச்சர்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர முடியாத நிலை உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, உலகில் ஒவ்வொரு நாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும், அந்த உணவுகள் சாதாரண விலையில் வழங்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் கட்சி கூறுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement