• Dec 21 2024

சஜித்தின் கல்விச் சான்றிதழ்களை ஆராய வேண்டும்; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிரடி அறிவிப்பு..!

Sharmi / Dec 20th 2024, 9:05 am
image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களை ஆராயவேண்டும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது . 

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில் 

தமது கல்வித் தகைமையை வெளிப் படுத்துவதற்கு ஆளுங்கட்சியினருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 

தற்போதைய சூழ்நிலையில் தமது கல்வித் தகைமைக்குரிய சான்றிதழ்களை முன்வைக்க முடியாத நிலையில் தான் சபாநாயகராக பதவி வகித்த அசோக ரன்வல பதவி விலகினார். 

மாறாக அவரின் பட்டம் பற்றி பிரச்சினை இல்லை. எனவே. அவர் விரைவில் சான்றிதழ்களை முன் வைப்பார்.

எமது தரப்பில் உள்ள எவரும் போலித் தகவல்களை முன்வைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது சான்றிதழ்களை நேற்றுமுன்தினம் சபையில் சமர்ப்பித்துள்ளார்  

நேற்றுமுன்தினம் மாலைவரை ஹன்சார்ட்டுக்கு வழங்ப்பட்டிருக்கவில்லை. 

நேற்று காலைவரைகூட கையளிக்கப்படவில்லை.

எனவே. எதிர்க்கட்சித் தலைவர் காண்பித்த சான்றிதழ்களை ஆராயவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தின் கல்விச் சான்றிதழ்களை ஆராய வேண்டும்; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிரடி அறிவிப்பு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களை ஆராயவேண்டும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது . இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில் தமது கல்வித் தகைமையை வெளிப் படுத்துவதற்கு ஆளுங்கட்சியினருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் தமது கல்வித் தகைமைக்குரிய சான்றிதழ்களை முன்வைக்க முடியாத நிலையில் தான் சபாநாயகராக பதவி வகித்த அசோக ரன்வல பதவி விலகினார். மாறாக அவரின் பட்டம் பற்றி பிரச்சினை இல்லை. எனவே. அவர் விரைவில் சான்றிதழ்களை முன் வைப்பார்.எமது தரப்பில் உள்ள எவரும் போலித் தகவல்களை முன்வைக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது சான்றிதழ்களை நேற்றுமுன்தினம் சபையில் சமர்ப்பித்துள்ளார்  நேற்றுமுன்தினம் மாலைவரை ஹன்சார்ட்டுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. நேற்று காலைவரைகூட கையளிக்கப்படவில்லை. எனவே. எதிர்க்கட்சித் தலைவர் காண்பித்த சான்றிதழ்களை ஆராயவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement