• Nov 22 2024

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்..!

Chithra / Feb 7th 2024, 8:55 am
image

 

இன்னும் சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கட்டம் கட்டமாக  திட்டமிடப்பட்டு மிகவும் நுணுக்கமாகத் தளர்த்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாகவும், 

அதன் அடிப்படையில் இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சரவையினால், அந்நிய செலாவணி வரம்புகளை படிப்படியாக நீக்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி உத்தரவுகளுக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.  


வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்.  இன்னும் சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கட்டம் கட்டமாக  திட்டமிடப்பட்டு மிகவும் நுணுக்கமாகத் தளர்த்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.மேலும் அமைச்சரவையினால், அந்நிய செலாவணி வரம்புகளை படிப்படியாக நீக்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி உத்தரவுகளுக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.  

Advertisement

Advertisement

Advertisement