• Nov 07 2025

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்; கொழும்பில் ஒன்றுகூடிய ஆதரவாளர்கள்

Chithra / Oct 8th 2025, 7:23 pm
image


தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக  ரத்துபஸ்வல ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டத்தில் குதித்துள்ளார்.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரியும் தேரர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 


இதன்போது, அவரின் ஆதரவாளர்கள் 20 பேர் ஜனாதிபதி செயலகத்தின் முன் இந்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

மகிந்தவுக்கு பாதுகாப்பு கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர்; கொழும்பில் ஒன்றுகூடிய ஆதரவாளர்கள் தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக  ரத்துபஸ்வல ரத்துபஸ்வல தேரிபெஹே சிறிதம்ம தேரர் இன்று பிற்பகல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டத்தில் குதித்துள்ளார்.ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரியும் தேரர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, அவரின் ஆதரவாளர்கள் 20 பேர் ஜனாதிபதி செயலகத்தின் முன் இந்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement