• Nov 22 2024

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இம்முறை அதிக நிதி ஒதுக்கீடு- பதில் மாவட்ட செயலாளர் மகிழ்ச்சி..!

Sharmi / Aug 29th 2024, 8:31 am
image

யாழ் மாவட்டத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக 1233.94 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வரவேற்பு உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

யாழ் மாவட்டத்துக்கு இரண்டாயிரத்து நானூற்று அறுபத்தேழு வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச பிரிவுகளிலும் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைக்கப்பெற்ற 322 மில்லியன் ரூபா நிதி உள்ளடங்குகிறது.

ஒட்டுமொத்த நிதிக்கான வேலைத் திட்டங்களும் அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இம்முறை அதிக நிதி ஒதுக்கீடு- பதில் மாவட்ட செயலாளர் மகிழ்ச்சி. யாழ் மாவட்டத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக 1233.94 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது வரவேற்பு உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்துக்கு இரண்டாயிரத்து நானூற்று அறுபத்தேழு வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச பிரிவுகளிலும் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அதில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைக்கப்பெற்ற 322 மில்லியன் ரூபா நிதி உள்ளடங்குகிறது. ஒட்டுமொத்த நிதிக்கான வேலைத் திட்டங்களும் அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement