• Nov 28 2024

இலங்கை ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்

Chithra / Aug 1st 2024, 8:49 am
image

 

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர்கள் இயங்கி வந்ததாக தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸார் அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐ.எஸ்.எம் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 10 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள்  இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குழுவில் 44 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர்கள் இயங்கி வந்ததாக தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸார் அந்த ஹோட்டலை சுற்றிவளைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்தச் சோதனையின் போது 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணனிகள் மற்றும் பல ஐ.எஸ்.எம் அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 10 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement