• Nov 28 2024

அம்பாந்தோட்டையில் மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்!

Tamil nila / Oct 23rd 2024, 10:01 pm
image

மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

மேற்படி தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து அருகிலிருந்த மின் இணைப்பில் பொருத்தி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த எட்டு வயது குழந்தை, உயிரிழந்த தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பின்னர், இந்தத் தாயார் உடனடியாகத் தனது குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணியை வெளியே எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாயாரின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருகின்றார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாந்தோட்டையில் மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.மேற்படி தாயார் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார்.இதன்போது, உயிரிழந்த தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து அருகிலிருந்த மின் இணைப்பில் பொருத்தி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.இதனை அவதானித்த எட்டு வயது குழந்தை, உயிரிழந்த தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.பின்னர், இந்தத் தாயார் உடனடியாகத் தனது குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணியை வெளியே எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த தாயாரின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருகின்றார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement