• Apr 01 2025

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பிரேரணை: நாமல் அதிருப்தி..!

Sharmi / Mar 28th 2025, 8:44 am
image

அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு பதிலளிக்கும் விதமாகவே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஜனவரி 2013 இல் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

"தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல. இதுபோன்ற முடிவுகளுக்கான விலையை எங்கள் கட்சி இன்னும் செலுத்தி வருகிறது.

அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது எனவும் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பிரேரணை: நாமல் அதிருப்தி. அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு பதிலளிக்கும் விதமாகவே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஜனவரி 2013 இல் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்."தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல. இதுபோன்ற முடிவுகளுக்கான விலையை எங்கள் கட்சி இன்னும் செலுத்தி வருகிறது.அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement