• Feb 27 2026

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இளைஞன் உயிரிழப்பு!

shanuja / Feb 26th 2026, 11:30 am
image

மின்கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


இந்த விபத்துச் சம்பவம் அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - கண்டி வீதியில் நேற்று புதன்கிழமை (25) மதியம் இடம்பெற்றுள்ளது. 


மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டு விலகி, மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன்போது, விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்  சாரதி, சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


உயிரிழந்தவர் பொல்வகா காலனி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் - இளைஞன் உயிரிழப்பு மின்கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - கண்டி வீதியில் நேற்று புதன்கிழமை (25) மதியம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியைவிட்டு விலகி, மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது, விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்  சாரதி, சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் பொல்வகா காலனி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement