• Apr 11 2025

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - மொட்டு கட்சி உறுப்பினர் யாழில் கைது..!

Chithra / May 12th 2024, 3:29 pm
image

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரொருவர் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - மொட்டு கட்சி உறுப்பினர் யாழில் கைது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரொருவர் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவக அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now