• Oct 20 2024

தேர்வு விடைத்தாளில் சினிமா பாடல்.. கூலாக அட்வைஸ் செய்து மார்க் போட்ட பேராசிரியர்! samugammedia

Tamil nila / Apr 4th 2023, 11:10 pm
image

Advertisement

தேர்வு நேரம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். பொதுவாக நாம் படிக்கும் போது பள்ளிப் பருவத்தில், சில மாணவர்கள் கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால் அந்த கேள்வியையே மீண்டும் மீண்டும் எழுதி விடைத்தாளை நிரப்பி வைப்பர். அது அந்த தலைமுறையின் குசும்பு என்றால், தற்போதைய தலைமுறை மாணவர்கள் கொஞ்சம் மேலே சென்று விடைத்தாளில் கேள்விகளுக்குப் பாடல்களை எழுதி வைத்துள்ளனர்.

இது போன்ற விடைத்தாளை ஆசிரியர்கள் பார்க்கும் போது அப்படியே அடித்து 0 மதிப்பெண்கள் கொடுப்பர். ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசமாக ஆசிரியர், மாணவனின் முழு பாடல்களைப் படித்து அதற்கு மறு கருத்தையும் எழுதியுள்ளார். தற்போது அந்த விடைத்தாளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரலான வீடியோவில், சண்டிகர் பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் என்பது தெரிகிறது. வெறும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியுள்ள மாணவர், சினிமா பாடல் வரிகளைக் கொண்டு நிரப்பி உள்ளான். அதில் ஒரு கேள்விக்கு, “மாம் நீங்கள் மிகவும் புத்திசாலி, நான் சரியாக படிக்காதது தான் காரணம் என்றும், கடவுளே எனக்கு கொஞ்சம் படிப்பதற்கு திறமையை கொடு” என்று எழுதியுள்ளான்.

தேர்வு விடைத்தாளில் சினிமா பாடல். கூலாக அட்வைஸ் செய்து மார்க் போட்ட பேராசிரியர் samugammedia தேர்வு நேரம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். பொதுவாக நாம் படிக்கும் போது பள்ளிப் பருவத்தில், சில மாணவர்கள் கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால் அந்த கேள்வியையே மீண்டும் மீண்டும் எழுதி விடைத்தாளை நிரப்பி வைப்பர். அது அந்த தலைமுறையின் குசும்பு என்றால், தற்போதைய தலைமுறை மாணவர்கள் கொஞ்சம் மேலே சென்று விடைத்தாளில் கேள்விகளுக்குப் பாடல்களை எழுதி வைத்துள்ளனர்.இது போன்ற விடைத்தாளை ஆசிரியர்கள் பார்க்கும் போது அப்படியே அடித்து 0 மதிப்பெண்கள் கொடுப்பர். ஆனால் இங்கு கொஞ்சம் வித்தியாசமாக ஆசிரியர், மாணவனின் முழு பாடல்களைப் படித்து அதற்கு மறு கருத்தையும் எழுதியுள்ளார். தற்போது அந்த விடைத்தாளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.வைரலான வீடியோவில், சண்டிகர் பல்கலைக்கழகத்தில் தேர்வு விடைத்தாள் என்பது தெரிகிறது. வெறும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியுள்ள மாணவர், சினிமா பாடல் வரிகளைக் கொண்டு நிரப்பி உள்ளான். அதில் ஒரு கேள்விக்கு, “மாம் நீங்கள் மிகவும் புத்திசாலி, நான் சரியாக படிக்காதது தான் காரணம் என்றும், கடவுளே எனக்கு கொஞ்சம் படிப்பதற்கு திறமையை கொடு” என்று எழுதியுள்ளான்.

Advertisement

Advertisement

Advertisement