• Sep 15 2025

கார் விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன்

Aathira / Sep 14th 2025, 8:40 pm
image

பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் இன்று (14) விபத்தொன்றில் சிக்கியுள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியிலேயே இன்று பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

அம்பாறையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பங்கேற்று மட்டக்களப்புக்கு திரும்பிய சந்தர்ப்பத்திலே,

பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து பயணித்த வாகனம், கார் ஒன்றுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கார் விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் இன்று (14) விபத்தொன்றில் சிக்கியுள்ளார்.மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியிலேயே இன்று பிற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அம்பாறையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பங்கேற்று மட்டக்களப்புக்கு திரும்பிய சந்தர்ப்பத்திலே,பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து பயணித்த வாகனம், கார் ஒன்றுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement