• Aug 09 2026

எம்.பிக்களின் வேதனம் அதிகரிக்கவில்லை – எரிபொருள் கொடுப்பனவே திருத்தம்! அரசு விளக்கம்

Chithra / Aug 8th 2026, 9:33 am
image


நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் அதிகரிக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.


நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளினதும் மாதாந்தக் கொடுப்பனவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


அதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு ஊடாக இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.பிக்களின் வேதனம் அதிகரிக்கவில்லை – எரிபொருள் கொடுப்பனவே திருத்தம் அரசு விளக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் அதிகரிக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளினதும் மாதாந்தக் கொடுப்பனவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.அதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு ஊடாக இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement