• Nov 26 2024

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்..!

Sharmi / Sep 17th 2024, 2:16 pm
image

முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்றைய தினம்(17) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட செயராளருமான  அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள், தேர்தல் நாளில் முகவர்கள் ,கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நடந்து கொள்ளவேண்டிய முறைகள் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு  எடுத்துச்செல்லல், மீள கொண்டு வருதல், வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்புக்கள் விசேட தேவையுடையோருக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான தெளிவூட்டலை முல்லைத்தீவு மாவட்ட  உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெனிற்றன் வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள், கட்சி முகவர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விசேடமாக குறித்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல். முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் இன்றைய தினம்(17) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட செயராளருமான  அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது, தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள், தேர்தல் நாளில் முகவர்கள் ,கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நடந்து கொள்ளவேண்டிய முறைகள் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு  எடுத்துச்செல்லல், மீள கொண்டு வருதல், வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்புக்கள் விசேட தேவையுடையோருக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான தெளிவூட்டலை முல்லைத்தீவு மாவட்ட  உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெனிற்றன் வழங்கினார்.இந்த கலந்துரையாடலில், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள், கட்சி முகவர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.விசேடமாக குறித்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  

Advertisement

Advertisement

Advertisement