நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யார் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்களோ அவர்களிடம் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கும் நாங்கள் பெரும்பான்மையாக வென்ற பிரதேசங்களில் சகோதரக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சில இடங்களில் மக்கள் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏனைய சிறிய கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றன.
தேசிய மக்கள் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும் நம்மிடம் பேசி உள்ளனர்.
கொழும்பு போன்ற பகுதியையும் எமது அங்கத்தவர்கள் இணைத்து செயல்பட கலந்தாலோசித்து வருகின்றோம்.
நமது சகோதர கட்சியான இலங்கை தமிழரசு கட்சியுடனும் சில இடங்களில் நாங்கள் அவர்களும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை:முஸ்லீம் காங்கிரஸ் அறிவிப்பு. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,யார் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்களோ அவர்களிடம் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கும் நாங்கள் பெரும்பான்மையாக வென்ற பிரதேசங்களில் சகோதரக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சில இடங்களில் மக்கள் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏனைய சிறிய கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றன. தேசிய மக்கள் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும் நம்மிடம் பேசி உள்ளனர். கொழும்பு போன்ற பகுதியையும் எமது அங்கத்தவர்கள் இணைத்து செயல்பட கலந்தாலோசித்து வருகின்றோம்.நமது சகோதர கட்சியான இலங்கை தமிழரசு கட்சியுடனும் சில இடங்களில் நாங்கள் அவர்களும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.