எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை, 'தாருஸலாம்' தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.நழீம் உள்ளிட்ட கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, மொறட்டுவை, கொலன்னாவ மாநகர சபைகளுக்கும், கொடிகாவத்தை, முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்ததோடு,அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளது.இது தொடர்பில் நேற்று முன்தினம் மாலை, 'தாருஸலாம்' தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.நழீம் உள்ளிட்ட கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, மொறட்டுவை, கொலன்னாவ மாநகர சபைகளுக்கும், கொடிகாவத்தை, முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்ததோடு,அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.