• Dec 17 2025

மூளைச்சலவை செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள்; இஸ்ரேலியர்களால் கிழக்குக்கு அச்சுறுத்தல்! எச்சரிக்கும் முன். இராஜாங்க அமைச்சர்

Chithra / Sep 17th 2025, 12:38 pm
image

 

பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள், ஹோட்டல்கள், நிலங்கள் இஸ்ரேலியர்களால்  கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. சில முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை காரியாலயத்தில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்

தலைவர் அஸ்ரப் மரணித்து 25 வருடங்கள் ஆகியுள்ள  இந்த சூழ்நிலையில் அவர் விட்டுச் சென்ற பணிகள் முழுமையாக நிறைவேறி உள்ளதா என்று நாங்கள் வினவ வேண்டி இருக்கின்றது.

மிக முக்கியமாக அவர் வேண்டி நின்ற  வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வு. அதே போன்று பிராந்திய நிர்வாக பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்ற இன்னும் தீர்க்கப்படாது இருக்கின்றது.

இச் சூழ்நிலையில் மிக முக்கியமான கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று காசாவில் இஸ்ரேல் யூத சக்திகள் அங்கு  முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு அழிந்துள்ளார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

அந்த நாட்டின் (பலஸ்தீனம்)   வரலாற்றை இல்லாமல் ஆக்குவதற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு  பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறான ஒரு கொடுமையான மனிதாபிமானம்   இல்லாத ஒரு கூட்டம்  காசாவில் உள்ள மக்களுக்கு உணவு, நீர் போன்றவற்றை இல்லாமல் செய்து, பட்டினியில்  மக்களை மரணப்படுக்கையில் வைத்திருக்கின்ற   ஒரு கொடூர சக்தி இன்று எமது பிராந்தியத்தில் நாம் வசிக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் உல்லாசமாக திரிவது  மட்டுமல்லாமல் இன்று  அவர்கள் அங்கு அமைதியாக  இருக்கின்ற  எமது மக்களை ஆத்திரமூட்டச் செய்கின்ற வகையில் பல நடவடிக்கையில் ஈடுபடுவதை  மிகப் பெரிய கவலைக்குரிய விடயமாக மாறி இருக்கின்றது.

நான் மிக நீண்ட காலமாக பொத்துவில் அருகம்பை  பகுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி ஆதாரத்துடன் சில விடயங்களை ஆய்வு செய்த பின்பு தான் நான் இப்பொழுது இந்த  கருத்தினை பகிர்ந்து கொள்கின்றேன்.

அவர்கள், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்தை நிறைவேற்றுகின்ற அவர்களின் உளவு பிரிவான மொசாட்டினை சேர்ந்தவர்கள்.

அதேபோன்று இராணுவத்தில் பணியாற்றுகின்ற வீர வீராங்கனைகள் இன்று உல்லாச பயணிகள் போன்று பொத்துவில் பகுதியில் முகாமிட்டு, எமது  முஸ்லிம் சமுதாயத்தை ஆத்திரமூட்டச் செய்கின்ற முதல் கைங்காரியமாக, அவர்கள் பொத்துவில் பகுதியில் உள்ள  மபாஷா பள்ளிவாசல் அருகில்  இன்று அவர்களுடைய சபாத் என்ற  யூத ஆலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த ஆலயம் ஒரு சட்டவிரோத ஆலயம். இது சம்பந்தமாக அப்பிரதேச மக்கள் பல தரப்பினரிடம்  முறையிட்டும் இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை.

அதற்கு  கட்டட அனுமதி ஏனைய உள்ளூராட்சி விதிகளின் படி  அனுமதி வழங்கி இருக்கின்ற பிரதேச சபையும் மௌனமாக இருப்பது பெரும் ஒரு கண்டனத்துக்குரிய விடயம்.

அவர்களுக்கு உரித்தான சட்டத்தை அமுல்படுத்தி அந்த சபாத் இல்லத்தை மூடுவதற்குரிய எந்த   ஒரு பகிரங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதைவிட ஊடகவியலாளர்கள் இந்த  விடயம் தொடர்பாக கேள்வி கேட்கின்ற போது   பிரதேச சபை நிர்வாகம் அதன் தவிசாளர் மழுப்பலான  பதிலை தான்  தெரிவித்திருக்கின்றார்.

இது தவிர என்ன ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு இது தொடர்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காது   ஒரு பொறுப்பற்ற முறையில் அவர் நடந்திருக்கின்றார். இதன்  காரணமாக அவர்கள் இரண்டாவது சபாத் இல்லம்  இன்று ரூபாஸ் ஹோட்டல் அருகே   ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த புதிய இரண்டாவது சபாத் இல்லத்தில்   அவர்களது மத நிகழ்ச்சிகள் நிறைவேறி இருக்கின்றது. 

இது சம்பந்தமாக பொத்துவில்  சில இளைஞர்கள் தங்களது முகநூலில் கண்டனத்தை தெரிவித்த போது போலீசார் மற்றும்  குற்றப் புலனாய்வு  பிரிவினராலும்  அந்த  இளைஞர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பாரிய விசாரணைகளை  மேற்கொண்டு அச்சுறுத்திருக்கிறார்கள்.

எனவே இது ஒரு திட்டமிட்ட அடிப்படையில் இந்த விடயங்கள் ஒன்றில் இருந்த சபாத் இல்லம் இரண்டாக மாறியிருக்கிறது. பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால்  கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான  துர்ப்பாக்கிய நிலைமைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே ஒரு சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. 

இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு  ஒரு தளமாக அருகம்பையை ஒரு தளமாக   பாவிக்கப் போகின்றார்கள் என்பது தான் இதில் உள்ள மர்மம். இந்த நாட்டில் பல சுற்றுலாத் தலங்கள் இருந்து கொண்டிருக்கின்றது.

ஹிக்கடுவை  இருக்கின்றது. பாசிக்குடா இருக்கின்றது. பெந்தோட்டை  இருக்கின்றது. நுவரெலியா  இருக்கின்றது. கொழும்பு மற்றும் கண்டி  இருக்கின்றது. நிலாவெளி இருக்கின்றது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நிரந்தரமாக ஒரு குடியிருப்பாளர்கள் போன்று நிலங்களை வாங்கி அங்கு செயற்படுகிறார்கள் என்றால் இது மிகவும் பூகோள அரசியலில் பெரும் ஒரு  சதி தளமாகவே  பார்க்க வேண்டும்.

தெற்காசியாவில் பெரும் நாடு  இந்தியாவில் கூட இவ்வாறு முகாமிடவில்லை.  பூட்டான் மற்றும் நேபாளத்தில் கூட முகாமிடவில்லை. மாலைதீவில் கூட இவ்வாறு படையெடுக்கவில்லை. இதில் எமக்கு இருக்கும்  அச்சம் என்னவென்றால் தெற்காசியாவில் முஸ்லிம் பெரும்பான்மையாக பலத்துடன்  இருக்கின்ற ஒரே ஒரு மாகாணம்  கிழக்கு மாகாணம்.

இந்த கிழக்கு மாகாண முஸ்லிம்களுடைய அரசியல் பலம். அதே நேரம்  ஏனைய இனங்களுடன்  பௌத்த தமிழ் இனங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒற்றுமை, இந்த அரசின்  இல்லாமல் செய்வதற்கான  ஒரு சதி திட்டத்தில் ஒரு அங்கமாக நான் இதைப் பார்க்கின்றேன். இது எதிர்காலத்தில் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது  என்றார்.


மூளைச்சலவை செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள்; இஸ்ரேலியர்களால் கிழக்குக்கு அச்சுறுத்தல் எச்சரிக்கும் முன். இராஜாங்க அமைச்சர்  பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள், ஹோட்டல்கள், நிலங்கள் இஸ்ரேலியர்களால்  கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. சில முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.கல்முனை காரியாலயத்தில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்தலைவர் அஸ்ரப் மரணித்து 25 வருடங்கள் ஆகியுள்ள  இந்த சூழ்நிலையில் அவர் விட்டுச் சென்ற பணிகள் முழுமையாக நிறைவேறி உள்ளதா என்று நாங்கள் வினவ வேண்டி இருக்கின்றது.மிக முக்கியமாக அவர் வேண்டி நின்ற  வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான தீர்வு. அதே போன்று பிராந்திய நிர்வாக பிரச்சனைகளுக்கான தீர்வுகள் போன்ற இன்னும் தீர்க்கப்படாது இருக்கின்றது.இச் சூழ்நிலையில் மிக முக்கியமான கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்று காசாவில் இஸ்ரேல் யூத சக்திகள் அங்கு  முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு அழிந்துள்ளார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த நாட்டின் (பலஸ்தீனம்)   வரலாற்றை இல்லாமல் ஆக்குவதற்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு  பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.இவ்வாறான ஒரு கொடுமையான மனிதாபிமானம்   இல்லாத ஒரு கூட்டம்  காசாவில் உள்ள மக்களுக்கு உணவு, நீர் போன்றவற்றை இல்லாமல் செய்து, பட்டினியில்  மக்களை மரணப்படுக்கையில் வைத்திருக்கின்ற   ஒரு கொடூர சக்தி இன்று எமது பிராந்தியத்தில் நாம் வசிக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் உல்லாசமாக திரிவது  மட்டுமல்லாமல் இன்று  அவர்கள் அங்கு அமைதியாக  இருக்கின்ற  எமது மக்களை ஆத்திரமூட்டச் செய்கின்ற வகையில் பல நடவடிக்கையில் ஈடுபடுவதை  மிகப் பெரிய கவலைக்குரிய விடயமாக மாறி இருக்கின்றது.நான் மிக நீண்ட காலமாக பொத்துவில் அருகம்பை  பகுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி ஆதாரத்துடன் சில விடயங்களை ஆய்வு செய்த பின்பு தான் நான் இப்பொழுது இந்த  கருத்தினை பகிர்ந்து கொள்கின்றேன்.அவர்கள், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் திட்டத்தை நிறைவேற்றுகின்ற அவர்களின் உளவு பிரிவான மொசாட்டினை சேர்ந்தவர்கள்.அதேபோன்று இராணுவத்தில் பணியாற்றுகின்ற வீர வீராங்கனைகள் இன்று உல்லாச பயணிகள் போன்று பொத்துவில் பகுதியில் முகாமிட்டு, எமது  முஸ்லிம் சமுதாயத்தை ஆத்திரமூட்டச் செய்கின்ற முதல் கைங்காரியமாக, அவர்கள் பொத்துவில் பகுதியில் உள்ள  மபாஷா பள்ளிவாசல் அருகில்  இன்று அவர்களுடைய சபாத் என்ற  யூத ஆலயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த ஆலயம் ஒரு சட்டவிரோத ஆலயம். இது சம்பந்தமாக அப்பிரதேச மக்கள் பல தரப்பினரிடம்  முறையிட்டும் இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை.அதற்கு  கட்டட அனுமதி ஏனைய உள்ளூராட்சி விதிகளின் படி  அனுமதி வழங்கி இருக்கின்ற பிரதேச சபையும் மௌனமாக இருப்பது பெரும் ஒரு கண்டனத்துக்குரிய விடயம்.அவர்களுக்கு உரித்தான சட்டத்தை அமுல்படுத்தி அந்த சபாத் இல்லத்தை மூடுவதற்குரிய எந்த   ஒரு பகிரங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதைவிட ஊடகவியலாளர்கள் இந்த  விடயம் தொடர்பாக கேள்வி கேட்கின்ற போது   பிரதேச சபை நிர்வாகம் அதன் தவிசாளர் மழுப்பலான  பதிலை தான்  தெரிவித்திருக்கின்றார்.இது தவிர என்ன ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு இது தொடர்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காது   ஒரு பொறுப்பற்ற முறையில் அவர் நடந்திருக்கின்றார். இதன்  காரணமாக அவர்கள் இரண்டாவது சபாத் இல்லம்  இன்று ரூபாஸ் ஹோட்டல் அருகே   ஆரம்பித்திருக்கிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த புதிய இரண்டாவது சபாத் இல்லத்தில்   அவர்களது மத நிகழ்ச்சிகள் நிறைவேறி இருக்கின்றது. இது சம்பந்தமாக பொத்துவில்  சில இளைஞர்கள் தங்களது முகநூலில் கண்டனத்தை தெரிவித்த போது போலீசார் மற்றும்  குற்றப் புலனாய்வு  பிரிவினராலும்  அந்த  இளைஞர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பாரிய விசாரணைகளை  மேற்கொண்டு அச்சுறுத்திருக்கிறார்கள்.எனவே இது ஒரு திட்டமிட்ட அடிப்படையில் இந்த விடயங்கள் ஒன்றில் இருந்த சபாத் இல்லம் இரண்டாக மாறியிருக்கிறது. பொத்துவில் பகுதியில் உள்ள முக்கிய தலங்கள் இஸ்ரேலியர்களால்  கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹோட்டல்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.எங்களது முஸ்லிம் இளைஞர்கள் மூளைச்சலை செய்யப்பட்டு அவர்கள் யூத கலாச்சாரத்திற்கு அவர்களை பின்பற்றுவதற்கான ஆசை வார்த்தைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறான  துர்ப்பாக்கிய நிலைமைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே ஒரு சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு  ஒரு தளமாக அருகம்பையை ஒரு தளமாக   பாவிக்கப் போகின்றார்கள் என்பது தான் இதில் உள்ள மர்மம். இந்த நாட்டில் பல சுற்றுலாத் தலங்கள் இருந்து கொண்டிருக்கின்றது.ஹிக்கடுவை  இருக்கின்றது. பாசிக்குடா இருக்கின்றது. பெந்தோட்டை  இருக்கின்றது. நுவரெலியா  இருக்கின்றது. கொழும்பு மற்றும் கண்டி  இருக்கின்றது. நிலாவெளி இருக்கின்றது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நிரந்தரமாக ஒரு குடியிருப்பாளர்கள் போன்று நிலங்களை வாங்கி அங்கு செயற்படுகிறார்கள் என்றால் இது மிகவும் பூகோள அரசியலில் பெரும் ஒரு  சதி தளமாகவே  பார்க்க வேண்டும்.தெற்காசியாவில் பெரும் நாடு  இந்தியாவில் கூட இவ்வாறு முகாமிடவில்லை.  பூட்டான் மற்றும் நேபாளத்தில் கூட முகாமிடவில்லை. மாலைதீவில் கூட இவ்வாறு படையெடுக்கவில்லை. இதில் எமக்கு இருக்கும்  அச்சம் என்னவென்றால் தெற்காசியாவில் முஸ்லிம் பெரும்பான்மையாக பலத்துடன்  இருக்கின்ற ஒரே ஒரு மாகாணம்  கிழக்கு மாகாணம்.இந்த கிழக்கு மாகாண முஸ்லிம்களுடைய அரசியல் பலம். அதே நேரம்  ஏனைய இனங்களுடன்  பௌத்த தமிழ் இனங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒற்றுமை, இந்த அரசின்  இல்லாமல் செய்வதற்கான  ஒரு சதி திட்டத்தில் ஒரு அங்கமாக நான் இதைப் பார்க்கின்றேன். இது எதிர்காலத்தில் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement