பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 18.05.2026 அன்றையதினம் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் 7 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆண்கள் பிரிவில் A. எழிலன், S. கோதீசன் மற்றும் S. நிதர்சன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், A.கவிப்பிரியன், S. ஶ்ரீ தனோசன் மற்றும் T. நிவேதன் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் , S. அக்சயன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.
பெண்கள் பிரிவில் U. சர்மிதா, R. கயல்விழி, J. திவ்விகா மற்றும் S.யுகன்சிகா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், S. ஜேனுகா மற்றும் V.கனியிசை ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், S. சோபனா மற்றும் S. ருபிசனா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/வித்யானந்த கல்லூரி மாணவர்கள் சாதனை பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 18.05.2026 அன்றையதினம் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் 7 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.ஆண்கள் பிரிவில் A. எழிலன், S. கோதீசன் மற்றும் S. நிதர்சன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், A.கவிப்பிரியன், S. ஶ்ரீ தனோசன் மற்றும் T. நிவேதன் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் , S. அக்சயன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.பெண்கள் பிரிவில் U. சர்மிதா, R. கயல்விழி, J. திவ்விகா மற்றும் S.யுகன்சிகா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், S. ஜேனுகா மற்றும் V.கனியிசை ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், S. சோபனா மற்றும் S. ருபிசனா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.