• Dec 19 2024

சட்டப் பரீட்சையில் நாமல் மோசடி; இலங்கை வரும் முக்கிய சாட்சி...!

Sharmi / Dec 19th 2024, 12:27 pm
image

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன என்ற நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட புகாருக்கு சாட்சியாக இலங்கை வரவுள்ளதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் தாம் வழங்கியதாகவும், அனைத்து தகவல்களும் உண்மையே எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்திடம் முறையிட்டும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம்(18) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ச,

சட்டக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சையை பிரத்தியேக குளிர் அறையில் இருந்து எழுதியதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை சட்டத்தின் முன் நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை என் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை  ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குங்கள் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சட்டப் பரீட்சையில் நாமல் மோசடி; இலங்கை வரும் முக்கிய சாட்சி. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன என்ற நபர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட புகாருக்கு சாட்சியாக இலங்கை வரவுள்ளதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் தாம் வழங்கியதாகவும், அனைத்து தகவல்களும் உண்மையே எனவும் தெரிவித்தார்.அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்திடம் முறையிட்டும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்றையதினம்(18) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ச,சட்டக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சையை பிரத்தியேக குளிர் அறையில் இருந்து எழுதியதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை சட்டத்தின் முன் நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் எனவும் தெரிவித்தார்.அதேவேளை என் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை  ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குங்கள் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement