• Apr 30 2025

காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வு : ரணில் எதிர்ப்பு..!

Sharmi / Apr 30th 2025, 8:37 am
image

எதிர்வரும் மேதின நிகழ்வை தேசிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்றுவருகின்றேன். 

அப்படி இருந்தம் ஊர் முழுதும் என்னைதான் ஆளுங்கட்சியினர் திட்டி தீர்த்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை.

அதேபோல மே முதலாம் திகதியை நினைவுகூர வேண்டும். அரசியல் நிகழ்வுகளுக்கு காலிமுகத்திடலை வழங்குவதில்லை என முடிவெடுத்தோம். 

அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கின. தற்போது மே தினத்தை காலிமுகத்திடலில் நடத்தி அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி மீறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

 

காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வு : ரணில் எதிர்ப்பு. எதிர்வரும் மேதின நிகழ்வை தேசிய மக்கள் சக்தியினர் காலிமுகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்றுவருகின்றேன். அப்படி இருந்தம் ஊர் முழுதும் என்னைதான் ஆளுங்கட்சியினர் திட்டி தீர்த்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை.அதேபோல மே முதலாம் திகதியை நினைவுகூர வேண்டும். அரசியல் நிகழ்வுகளுக்கு காலிமுகத்திடலை வழங்குவதில்லை என முடிவெடுத்தோம். அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கின. தற்போது மே தினத்தை காலிமுகத்திடலில் நடத்தி அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி மீறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement