தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகமொன்றில் நடைபெறவுள்ளது
வடக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சேர்ந்த, தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கல் விழா 2026இல் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக, முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதுடன், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விருது வழங்கும் நிகழ்வில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
கிளிநொச்சியில் தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வு தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகமொன்றில் நடைபெறவுள்ளதுவடக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சேர்ந்த, தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கல் விழா 2026இல் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.குறிப்பாக, முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதுடன், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.மேலும், குறித்த விருது வழங்கும் நிகழ்வில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்