அரசாங்கம் வைத்தியர்கள் முன்வைத்துள்ள ஐந்து பிரதான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாரூக், நேற்று (19) சங்கத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனையடுத்து நடைபெற்ற அவசர மத்திய குழுக் கூட்டத்தில் ஐந்து பிரதான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு முன்னர் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் பொருளாதார நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் சங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து ஸ்திரமடைந்துள்ளதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், பொருளாதார நெருக்கடி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வைத்தியர்களின் கொடுப்பனவுகளை மீள வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2018ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 120,000 ரூபா டெட் கொடுப்பனவுக்கு பதிலாக, தற்போது 70,000 ரூபா மாத்திரமே வழங்கப்படுவதாகவும், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட முழுமையான கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர்களின் மேலதிக சேவைக் கொடுப்பனவு மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வைத்தியர்கள் சுமார் 4,400 கோடி ரூபாவை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான வரிச்சுமையை நீக்குவதுடன், போக்குவரத்து மற்றும் டெட் கொடுப்பனவுகளுக்கு விதிக்கப்படும் வரிகளையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடு முழுவதும் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அன்பாஸ் பாரூக் தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் தீவிர போராட்டம் – அரசுக்கு வைத்தியர்கள் வழங்கிய காலக்கெடு அரசாங்கம் வைத்தியர்கள் முன்வைத்துள்ள ஐந்து பிரதான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாரூக், நேற்று (19) சங்கத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனையடுத்து நடைபெற்ற அவசர மத்திய குழுக் கூட்டத்தில் ஐந்து பிரதான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கு முன்னர் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் பொருளாதார நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் சங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து ஸ்திரமடைந்துள்ளதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், பொருளாதார நெருக்கடி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வைத்தியர்களின் கொடுப்பனவுகளை மீள வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.2018ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 120,000 ரூபா டெட் கொடுப்பனவுக்கு பதிலாக, தற்போது 70,000 ரூபா மாத்திரமே வழங்கப்படுவதாகவும், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட முழுமையான கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.மேலும், கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர்களின் மேலதிக சேவைக் கொடுப்பனவு மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வைத்தியர்கள் சுமார் 4,400 கோடி ரூபாவை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான வரிச்சுமையை நீக்குவதுடன், போக்குவரத்து மற்றும் டெட் கொடுப்பனவுகளுக்கு விதிக்கப்படும் வரிகளையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கத் தவறினால், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடு முழுவதும் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அன்பாஸ் பாரூக் தெரிவித்தார்.