• Oct 30 2024

பாடசாலை கற்பித்தல் நேரத்தில் ஸ்மாட் தொலைபேசி தேவையா? - யாழில் கொதித்தெழுந்த பெற்றோர்கள்..!

Sharmi / Oct 28th 2024, 4:38 pm
image

Advertisement

யாழ் கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசி பாவித்தல் என பல குறைபாடுகளை முன்வைத்து மாணவர்களின் பெற்றோர்களால் கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம்(28) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்கள் வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.

வீதியை மறித்து போராடியதால் சிறிதுநேரம் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. 

இருப்பினும் கோப்பாய் பொலிஸார் நிலைமையை சரிசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


பாடசாலை கற்பித்தல் நேரத்தில் ஸ்மாட் தொலைபேசி தேவையா - யாழில் கொதித்தெழுந்த பெற்றோர்கள். யாழ் கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசி பாவித்தல் என பல குறைபாடுகளை முன்வைத்து மாணவர்களின் பெற்றோர்களால் கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம்(28) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது அவர்கள் வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.வீதியை மறித்து போராடியதால் சிறிதுநேரம் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இருப்பினும் கோப்பாய் பொலிஸார் நிலைமையை சரிசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement