வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் யாழ். அரச அதிபரால் விடுக்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து சென்றார்.
சங்கானை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயம் நடைபெற்றது. தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது பிரதேச செயலகமா? பிரதேச சபையா? என்ற குழப்பம் காணப்படுவதால் அதைத் தீர்த்து வைக்கவேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் பொதுமகனால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சர் பதிலளிக்காமல், அடுத்த விடயத்துக்குச் சென்றுள்ளமையானது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாசீனப்படுத்தப்படும் தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமுறைகள் - கண்டு கொள்ளாமல் செயல்படும் டக்ளஸ். samugammedia வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் யாழ். அரச அதிபரால் விடுக்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து சென்றார்.சங்கானை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயம் நடைபெற்றது. தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் யாழ்.அரச அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது பிரதேச செயலகமா பிரதேச சபையா என்ற குழப்பம் காணப்படுவதால் அதைத் தீர்த்து வைக்கவேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் பொதுமகனால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சர் பதிலளிக்காமல், அடுத்த விடயத்துக்குச் சென்றுள்ளமையானது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.