• Jul 16 2026

தடைப்பட்ட நெதன்யாகுவின் அமெரிக்க பயணம்-திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

Ziya / Jul 16th 2026, 3:47 pm
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, நெதன்யாகு சனிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கி நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளராகவும், ஈரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் அறியப்பட்ட அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.


அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நெதன்யாகு, கிரஹாமை தனது நெருங்கிய நண்பர் என்றும், அமெரிக்கா–இஸ்ரேல் உறவை வலுப்படுத்த அயராது பாடுபட்ட முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் புகழாரம் சூட்டினார். மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அவர் தொடர்ந்து வழங்கிய ஆதரவை என்றும் மறக்க முடியாது என்று குறிப்பிட்டார்.


நினைவேந்தல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால், நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணமும் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது

தடைப்பட்ட நெதன்யாகுவின் அமெரிக்க பயணம்-திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஏன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, நெதன்யாகு சனிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கி நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளராகவும், ஈரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் அறியப்பட்ட அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நெதன்யாகு, கிரஹாமை தனது நெருங்கிய நண்பர் என்றும், அமெரிக்கா–இஸ்ரேல் உறவை வலுப்படுத்த அயராது பாடுபட்ட முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் புகழாரம் சூட்டினார். மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக அவர் தொடர்ந்து வழங்கிய ஆதரவை என்றும் மறக்க முடியாது என்று குறிப்பிட்டார்.நினைவேந்தல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால், நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணமும் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement