• Sep 17 2026

காரைதீவு Dream Park பாலர் பாடசாலைக்கு புதிய கதிரைகள், ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கி வைப்பு

dorin / Sep 16th 2026, 11:00 am
image

காரைதீவு - 11 ஆம் பிரிவில் இயங்கி வரும் "Dream Park" பாலர் பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய கதிரைகள் மற்றும் ஒலியமைப்புச் சாதனங்கள் (Sound System) நேற்று (15) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட இப் பொருட்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினரால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளூர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, இப் பேருதவியினைப் பெற்றுத்தந்த நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


காரைதீவு Dream Park பாலர் பாடசாலைக்கு புதிய கதிரைகள், ஒலியமைப்புச் சாதனங்கள் வழங்கி வைப்பு காரைதீவு - 11 ஆம் பிரிவில் இயங்கி வரும் "Dream Park" பாலர் பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய கதிரைகள் மற்றும் ஒலியமைப்புச் சாதனங்கள் (Sound System) நேற்று (15) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட இப் பொருட்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினரால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், உள்ளூர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, இப் பேருதவியினைப் பெற்றுத்தந்த நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement