• Jul 22 2026

ஈரான்–பாகிஸ்தான் உறவை வலுப்படுத்த புதிய முயற்சி!

Ziya / Jul 21st 2026, 3:34 pm
image

வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமெனி உத்தியோகப்பூர்வ பயணமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சென்றடைந்துள்ளார்.


சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஆளுநர் ஜெனரல், உள்துறை துணை அமைச்சர், நகர்ப்புற மேம்பாடு மற்றும் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர், தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.


இஸ்லாமாபாத் வந்தடைந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய மொமெனி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுமே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி, ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற இலக்கை அடைவதற்கு முன்னதாகவே இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையும் பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான்–பாகிஸ்தான் உறவை வலுப்படுத்த புதிய முயற்சி வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமெனி உத்தியோகப்பூர்வ பயணமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் சென்றடைந்துள்ளார்.சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஆளுநர் ஜெனரல், உள்துறை துணை அமைச்சர், நகர்ப்புற மேம்பாடு மற்றும் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர், தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.இஸ்லாமாபாத் வந்தடைந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய மொமெனி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுமே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி, ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற இலக்கை அடைவதற்கு முன்னதாகவே இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதையும் பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement