• Nov 22 2024

மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதிபதிகள் நியமனம்

Chithra / Sep 6th 2024, 4:19 pm
image

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

இதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொடவத்த, மற்றும் ஆர்.ஏ.ரணராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் எம். சி. எல். பி. கோபல்லவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அதேவேளை, அரசியலமைப்பின் 107ஆவது பிரிவிற்கு அமைய இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நான்கு பேரின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்திருந்தார். 

அந்த  பெயர்ப்பட்டியலில், மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான குலதுங்க, தோட்டவத்த மற்றும் ரணராஜா ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த வெற்றிடங்களுக்கு மேற்குறிப்பிட்ட நால்வருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதிபதிகள் நியமனம்  மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தொடவத்த, மற்றும் ஆர்.ஏ.ரணராஜா ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், முன்னாள் சிரேஷ்ட பிரதி மன்றாடியர் நாயகம் எம். சி. எல். பி. கோபல்லவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அரசியலமைப்பின் 107ஆவது பிரிவிற்கு அமைய இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நான்கு பேரின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்திருந்தார். அந்த  பெயர்ப்பட்டியலில், மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான குலதுங்க, தோட்டவத்த மற்றும் ரணராஜா ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், குறித்த வெற்றிடங்களுக்கு மேற்குறிப்பிட்ட நால்வருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement