• Jan 11 2025

அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய வேலைத்திட்டம்

Chithra / Jan 3rd 2025, 12:46 pm
image

 

அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன அண்மையில் முடக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதனிடையே அண்மையில் முடக்கப்பட்ட அரச அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்த தரப்பினரால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டது என்பது குறித்து இதுவரையில் உரியத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய வேலைத்திட்டம்  அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் மற்றும் அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன அண்மையில் முடக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இதனைத் தெரிவித்துள்ளது.இதனிடையே அண்மையில் முடக்கப்பட்ட அரச அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.அத்துடன், எந்த தரப்பினரால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டது என்பது குறித்து இதுவரையில் உரியத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement