அரச சேவையில் ஈடுபடும், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் நியமிக்கப்படும் நபர்கள், சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ‘திவியட சவியக்’ வீடமைப்பு உதவித் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுடன் பணியாற்றும் நபர்கள் பொலிஸ் திணைக்களம் அல்லது உரிய நிறுவனங்களிடமிருந்து குறித்த சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரச சேவையில் உள்ளவர்கள் தங்களது சேவைக் காலத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தச் சான்றிதழை மீண்டும் புதுப்பிக்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘வளமான நாடு – அழகான வாழ்வு’ என்ற கருப்பொருளின் கீழ் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக பாதுகாப்பான நாட்டை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பராமரிப்பு இல்லங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் நாட்டு பிரஜைகள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ‘திவியட சவியக்’ வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் மேல் மாகாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நாளை (17) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுடன் பணிபுரிவோருக்கு புதிய கட்டுப்பாடு – சான்றிதழ் கட்டாயமாக்க அமைச்சரவைப் பத்திரம் அரச சேவையில் ஈடுபடும், குறிப்பாக சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளில் நியமிக்கப்படும் நபர்கள், சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ‘திவியட சவியக்’ வீடமைப்பு உதவித் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.சிறுவர்களுடன் பணியாற்றும் நபர்கள் பொலிஸ் திணைக்களம் அல்லது உரிய நிறுவனங்களிடமிருந்து குறித்த சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அரச சேவையில் உள்ளவர்கள் தங்களது சேவைக் காலத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பெறும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தச் சான்றிதழை மீண்டும் புதுப்பிக்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.‘வளமான நாடு – அழகான வாழ்வு’ என்ற கருப்பொருளின் கீழ் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக பாதுகாப்பான நாட்டை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பராமரிப்பு இல்லங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் நாட்டு பிரஜைகள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ‘திவியட சவியக்’ வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் மேல் மாகாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நாளை (17) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.