சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் லேபிள்களில் குறிப்பிட்ட சில விபரங்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இப்புதிய உத்தரவு, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியின் பெயர் தடித்த எழுத்துக்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டும்.
சவர்க்காரத்தில் அடங்கியுள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%), தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்குக் (2 மி.மீ) குறையாத தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும்.
இப்புதிய விதிகள் குழந்தை சவர்க்காரம், உடலுக்குப் பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்: நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு சந்தையிலுள்ள சிலவகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தலின் போது, அவற்றின் லேபிள்களில் குறிப்பிட்ட சில விபரங்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இப்புதிய உத்தரவு, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.உற்பத்தியின் பெயர் தடித்த எழுத்துக்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டும்.சவர்க்காரத்தில் அடங்கியுள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%), தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்குக் (2 மி.மீ) குறையாத தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும்.இப்புதிய விதிகள் குழந்தை சவர்க்காரம், உடலுக்குப் பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.