• Jan 27 2025

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

Tharmini / Jan 25th 2025, 3:39 pm
image

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத்,  நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அந்த நேரத்தில், அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வெங்ஸ் ஹெக்செத்திக்கு ஆதரவாக  வாக்களித்ததன் காரணமாக அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தீவிர வலதுசாரி கிறிஸ்தவரும், கடும் கோபம் கொள்ளும் நபருமான பீட்டர் ஹெக்செத்தை இந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தது தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாகியிருந்தது.

பீட்டர் ஹெக்செத் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத்,  நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன.அந்த நேரத்தில், அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வெங்ஸ் ஹெக்செத்திக்கு ஆதரவாக  வாக்களித்ததன் காரணமாக அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.தீவிர வலதுசாரி கிறிஸ்தவரும், கடும் கோபம் கொள்ளும் நபருமான பீட்டர் ஹெக்செத்தை இந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைத்தது தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாகியிருந்தது.பீட்டர் ஹெக்செத் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement