ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் மலையகத்திலும் களைகட்டி வருகின்றது.
அந்தவகையில், நள்ளிரவு 12 மணியளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன் புத்தாண்டை வரவேற்க பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்றுகூடியிருந்தனர்.
அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் குருக்கள் ஸ்ரீ கந்தன் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்படவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தங்களுக்குள் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.
அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும், மசூதிகளில் விசேட தொழுகைகளும் இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
மலையகத்தில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் மலையகத்திலும் களைகட்டி வருகின்றது.அந்தவகையில், நள்ளிரவு 12 மணியளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன் புத்தாண்டை வரவேற்க பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்றுகூடியிருந்தனர்.அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் குருக்கள் ஸ்ரீ கந்தன் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்படவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய தினம் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தங்களுக்குள் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும், மசூதிகளில் விசேட தொழுகைகளும் இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.