• Jan 19 2025

பிரித்தானியாவில் புத்தாண்டில் : 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு

Tharmini / Jan 1st 2025, 9:32 am
image

பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (31) முதல் நாளை (02) வரை பனி, மழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் பிரித்தானிய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது.

நேற்று (31 மற்றும் இன்று (01) ஸ்காட்லாந்தில் பனி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று (01) ,பனி தெற்கு இங்கிலாந்தில் பரவுவதுடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடுமையான காற்றும் கன மழையும் வீசும்.

மஞ்சள் எச்சரிக்கை ஜனவரி முதலாம் நாள் இன்று (01) காலை 9 மணிக்கு தொடங்கி, நாளை (02) மறுநாள் காலை 6 மணி வரை நீடிக்கும்.

பனி தொடர்பான தனி எச்சரிக்கையில், வடக்கு இங்கிலாந்து நகரங்கள் போன்ற பகுதிகளில் 2-5 செ.மீ. பனியும், சில இடங்களில் 20-25 செ.மீ. உயரம் வரை பனியும் அடிக்கக்கூடும்.

மின் துண்டிப்புக்கு முன்னதாக, டார்ச், பேட்டரிகள், மொபைல் போன் பவர் பேங்க் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு Met Office அறிவுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் புத்தாண்டில் : 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்று (31) முதல் நாளை (02) வரை பனி, மழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் பிரித்தானிய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது.நேற்று (31 மற்றும் இன்று (01) ஸ்காட்லாந்தில் பனி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (01) ,பனி தெற்கு இங்கிலாந்தில் பரவுவதுடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடுமையான காற்றும் கன மழையும் வீசும்.மஞ்சள் எச்சரிக்கை ஜனவரி முதலாம் நாள் இன்று (01) காலை 9 மணிக்கு தொடங்கி, நாளை (02) மறுநாள் காலை 6 மணி வரை நீடிக்கும்.பனி தொடர்பான தனி எச்சரிக்கையில், வடக்கு இங்கிலாந்து நகரங்கள் போன்ற பகுதிகளில் 2-5 செ.மீ. பனியும், சில இடங்களில் 20-25 செ.மீ. உயரம் வரை பனியும் அடிக்கக்கூடும்.மின் துண்டிப்புக்கு முன்னதாக, டார்ச், பேட்டரிகள், மொபைல் போன் பவர் பேங்க் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு Met Office அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement