• Oct 09 2024

தங்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன்..!

Sharmi / Sep 7th 2024, 11:40 pm
image

Advertisement

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் எம்.எச். முஹம்மட் ஹின்ஸான் 12 வயது ஆண்கள் பிரிவில் 60 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் 1ம் இடம்பெற்று தங்கம் வென்றுள்ளார்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு  மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம்மாணவனை பயிற்றுவித்த விளையாட்டு  பொறுப்பாசிரியர்களுக்கும் , அனுமதியை வழங்கி வழிப்படுத்திய அதிபர் ஏ.அப்துல் கபூர், வழிநடாத்திய பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.எஸ்.இன்பாத் மெளலானா உட்பட இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பாக இருந்து ஒருங்கிணைக்கும் உதவி அதிபர் எம்.எம்.உவைஸ் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.


தங்கம் வென்ற நிந்தவூர் அல்-அஷ்றக் மாணவன். கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவன் எம்.எச். முஹம்மட் ஹின்ஸான் 12 வயது ஆண்கள் பிரிவில் 60 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் 1ம் இடம்பெற்று தங்கம் வென்றுள்ளார்.மட்டக்களப்பு வெபர் விளையாட்டு  மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம்மாணவனை பயிற்றுவித்த விளையாட்டு  பொறுப்பாசிரியர்களுக்கும் , அனுமதியை வழங்கி வழிப்படுத்திய அதிபர் ஏ.அப்துல் கபூர், வழிநடாத்திய பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஐ.எம்.எஸ்.இன்பாத் மெளலானா உட்பட இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பாக இருந்து ஒருங்கிணைக்கும் உதவி அதிபர் எம்.எம்.உவைஸ் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement