• Nov 26 2024

எந்தவொரு வியாபாரியும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது - அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு!

Tamil nila / Oct 25th 2024, 10:14 pm
image

அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளை ஊக்குவிப்பதற்கும் உர மானியம் வழங்குவதற்கும் அரசாங்கம் பெருமளவிலான பணத்தைச் செலவிடுவதால், மக்களுக்கு அரிசி வழங்குவதில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரித்து அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பதன் மூலம் எந்தவொரு வியாபாரியும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

எந்தவொரு வியாபாரியும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது - அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைகளை ஊக்குவிப்பதற்கும் உர மானியம் வழங்குவதற்கும் அரசாங்கம் பெருமளவிலான பணத்தைச் செலவிடுவதால், மக்களுக்கு அரிசி வழங்குவதில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுக்கு சமூகப் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரித்து அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.அரிசியின் கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பதன் மூலம் எந்தவொரு வியாபாரியும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement