• Nov 24 2024

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை...! பெருகும் ஆதரவு...!திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்...!

Sharmi / Feb 29th 2024, 9:28 am
image

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய என்பன அறிவித்துள்ளன.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கு மாறாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிறைவேற்றுவதற்கு அனுமதித்ததாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்தன.

அதேவேளை,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நேற்றையதினம்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை. பெருகும் ஆதரவு.திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய என்பன அறிவித்துள்ளன.இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கு மாறாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிறைவேற்றுவதற்கு அனுமதித்ததாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்தன.அதேவேளை,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நேற்றையதினம்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement