• Sep 30 2026

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடரும் விளக்கமறியல்!

Chithra / Sep 29th 2026, 3:53 pm
image


மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.


2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு - கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக பிள்ளையான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அதேவேளை, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.


குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதில், லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் என்ற ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவரும் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.


இந்த வழக்கு இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரும் நீதிமன்றில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.


வழக்கை விசாரித்த நீதவான், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


அத்துடன், தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் சந்தேகநபரான மொஹமட் பாய்ஸுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பித்தும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இந்த நிலையில், மட்டக்களப்பில் இடம்பெற்ற குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடரும் விளக்கமறியல் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு - கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக பிள்ளையான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அதேவேளை, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதில், லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் என்ற ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவரும் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.இந்த வழக்கு இன்று திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகிய இருவரும் நீதிமன்றில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதவான், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.அத்துடன், தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் சந்தேகநபரான மொஹமட் பாய்ஸுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பித்தும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், மட்டக்களப்பில் இடம்பெற்ற குறித்த ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement