வீட்டை சுத்தம் செய்வது முதல் தரையைத் துடைப்பது வரை மனிதர்கள் செய்யும் அன்றாட வேலைகளை மேற்கொள்ளும் மனித வடிவ ரோபோக்கள், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
டாவ் ரோபோட்டிக்ஸ் நிறுவனம், வீடுகளுக்கே சென்று சுத்தம் செய்யும் ரோபோ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ரோபோக்கள் தரையை வெற்றிடக் கருவி மூலம் சுத்தம் செய்தல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் மேசை உள்ளிட்ட மேற்பரப்புகளைத் துடைத்தல் போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது.
மேலும், சில பணிகளில் பாத்திரங்களைச் சுத்தம் செய்தல், குளியலறையைத் துடைத்தல் மற்றும் படுக்கையைச் சீரமைத்தல் போன்ற வேலைகளையும் ரோபோக்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த ரோபோக்கள் தற்போது முழுமையாக தன்னாட்சி முறையில் இயங்கவில்லை. ஒவ்வொரு சுத்தம் செய்யும் பணியின்போதும், வேறு இடத்தில் இருக்கும் பயிற்சி பெற்ற மனிதர் ரோபோவை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவின் உணரிகள் அந்த இயக்கத்துக்கு உதவுகின்றன.
தற்போது இந்தச் சேவை சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமே, அதுவும் அழைப்பின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு ரோபோவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 30 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு ரோபோக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 60 டொலர் என நிறுவனத்தின் சேவை விவரங்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்களைப் போல வேகமாகவும் திறமையாகவும் இன்னும் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும், வீட்டு வேலைகளை ரோபோக்கள் நேரடியாக மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது ரோபோ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இனி வீட்டை சுத்தம் செய்ய மனிதர்கள் தேவையில்லை-களமிறங்கிய மனித வடிவ ரோபோக்கள் வீட்டை சுத்தம் செய்வது முதல் தரையைத் துடைப்பது வரை மனிதர்கள் செய்யும் அன்றாட வேலைகளை மேற்கொள்ளும் மனித வடிவ ரோபோக்கள், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளன.டாவ் ரோபோட்டிக்ஸ் நிறுவனம், வீடுகளுக்கே சென்று சுத்தம் செய்யும் ரோபோ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோக்கள் தரையை வெற்றிடக் கருவி மூலம் சுத்தம் செய்தல், பொருட்களை ஒழுங்குபடுத்துதல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் மேசை உள்ளிட்ட மேற்பரப்புகளைத் துடைத்தல் போன்ற பணிகளைச் செய்ய முடிகிறது.மேலும், சில பணிகளில் பாத்திரங்களைச் சுத்தம் செய்தல், குளியலறையைத் துடைத்தல் மற்றும் படுக்கையைச் சீரமைத்தல் போன்ற வேலைகளையும் ரோபோக்கள் மேற்கொண்டு வருகின்றன.இந்த ரோபோக்கள் தற்போது முழுமையாக தன்னாட்சி முறையில் இயங்கவில்லை. ஒவ்வொரு சுத்தம் செய்யும் பணியின்போதும், வேறு இடத்தில் இருக்கும் பயிற்சி பெற்ற மனிதர் ரோபோவை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவின் உணரிகள் அந்த இயக்கத்துக்கு உதவுகின்றன.தற்போது இந்தச் சேவை சான் பிரான்சிஸ்கோவில் மட்டுமே, அதுவும் அழைப்பின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு ரோபோவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 30 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு ரோபோக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 60 டொலர் என நிறுவனத்தின் சேவை விவரங்கள் தெரிவிக்கின்றன.மனிதர்களைப் போல வேகமாகவும் திறமையாகவும் இன்னும் செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும், வீட்டு வேலைகளை ரோபோக்கள் நேரடியாக மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது ரோபோ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.