அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறுகிறது.
அதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால், பெற்றோல் 92 UNL, மேர்பன் வகை மசகு எண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை நீண்டகால ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்வதற்காக இக்கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை மனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான குறைந்தபட்ச விலை மனுதாரர்களுக்கு பொருத்தமான வகையில் குறித்த பெறுகைகளை வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்போது லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதற்கான துணை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பங்கு மூலதனத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை வசமுள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்(சதொச) மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026-07-22 ஆம் திகதி நடாத்தப்பட்ட 34 ஆவது உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கு வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபா தொகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுற்றாடல், சட்ட மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதற்கு 2026 ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் நீதிமன்றங்களால் சீர்திருத்தக் கட்டளைகள் விதிக்கப்படும் போதைப்பொருள் தொடர்பான தவறாளர்களுக்கு வதிவிட சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக கெக்கிராவ பகுதியில் புதிய சீர்திருத்த நிலையமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களச் சட்டத்தின் கீழ், சிறு தவறுகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றங்கள் சமுதாயஞ்சார் சீர்திருத்தக் கட்டளைகளை விதித்து வருகின்றன.
இதற்காக 635 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல்லில் 30,000 மெற்றிக் தொன்களை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 ஜூலை 22ஆம் திகதி இடம்பெற்ற 34ஆவது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள மொத்த நெல் கையிருப்பிலிருந்து 30,000 மெற்றிக் தொன் நெல், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசியாக மாற்றப்படும்.
அரிசியாக மாற்றப்படும் நெல் 5, 10, 25 மற்றும் 50 கிலோகிராம் பொதிகளில் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்கள் பெறப்படவுள்ளன.
மேலும், நெல்லை அரிசியாக மாற்றும் விகிதம் மற்றும் அரிசிக்கான பொருத்தமான விலையை நிர்ணயிக்க, நெல் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், லங்கா சதொச, தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனம் மற்றும் ஹெக்டயர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளைக் கொண்ட விலை நிர்ணயக் குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தயாரிக்கப்படும் அரிசி லங்கா சதொச, கூட்டுறவு வலையமைப்பு மற்றும் தனியார் தரப்பினர்கள் ஊடாக சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
டிட்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான புனரமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக 2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், குறித்த கடன் வசதியின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகை பொது மூலதன வளங்களிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் நிரந்தர பொது மூலதன வளங்களிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொல்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
2026/2027 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்திற்குத் தேவையான 2.28 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தொடர்ச்சியான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதையும் இந்தக் கொள்முதல் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான குறைப்பயன்பாட்டுக் காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக கடந்த ஜனவரி 12 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டு அமுலாக்க பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை, வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான மொத்தம் 247 ஹெக்டெயர் குறைப்பயன்பாட்டுக் காணிகள் அடையாளம் காணப்பட்டு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, அரிசி விநியோகம், எரிசக்தி பாதுகாப்பு: அமைச்சரவை முக்கிய தீர்மானங்கள் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறுகிறது.அதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால், பெற்றோல் 92 UNL, மேர்பன் வகை மசகு எண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை நீண்டகால ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்வதற்காக இக்கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச பெறுகை முறையைக் கடைப்பிடித்து விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை மனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், கணிசமான குறைந்தபட்ச விலை மனுதாரர்களுக்கு பொருத்தமான வகையில் குறித்த பெறுகைகளை வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்போது லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதற்கான துணை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பங்கு மூலதனத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை வசமுள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்(சதொச) மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.2026-07-22 ஆம் திகதி நடாத்தப்பட்ட 34 ஆவது உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கு வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.மேலும் முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபா தொகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இலங்கை பெற்றோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுற்றாடல், சட்ட மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதற்கு 2026 ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் நீதிமன்றங்களால் சீர்திருத்தக் கட்டளைகள் விதிக்கப்படும் போதைப்பொருள் தொடர்பான தவறாளர்களுக்கு வதிவிட சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக கெக்கிராவ பகுதியில் புதிய சீர்திருத்த நிலையமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களச் சட்டத்தின் கீழ், சிறு தவறுகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றங்கள் சமுதாயஞ்சார் சீர்திருத்தக் கட்டளைகளை விதித்து வருகின்றன.இதற்காக 635 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல்லில் 30,000 மெற்றிக் தொன்களை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2026 ஜூலை 22ஆம் திகதி இடம்பெற்ற 34ஆவது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள மொத்த நெல் கையிருப்பிலிருந்து 30,000 மெற்றிக் தொன் நெல், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசியாக மாற்றப்படும்.அரிசியாக மாற்றப்படும் நெல் 5, 10, 25 மற்றும் 50 கிலோகிராம் பொதிகளில் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்கள் பெறப்படவுள்ளன.மேலும், நெல்லை அரிசியாக மாற்றும் விகிதம் மற்றும் அரிசிக்கான பொருத்தமான விலையை நிர்ணயிக்க, நெல் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், லங்கா சதொச, தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனம் மற்றும் ஹெக்டயர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளைக் கொண்ட விலை நிர்ணயக் குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.தயாரிக்கப்படும் அரிசி லங்கா சதொச, கூட்டுறவு வலையமைப்பு மற்றும் தனியார் தரப்பினர்கள் ஊடாக சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.டிட்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான புனரமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக 2026.06.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், குறித்த கடன் வசதியின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகை பொது மூலதன வளங்களிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் நிரந்தர பொது மூலதன வளங்களிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொல்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. 2026/2027 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்திற்குத் தேவையான 2.28 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.குறித்த காலப்பகுதியில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தொடர்ச்சியான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதையும் இந்தக் கொள்முதல் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு சொந்தமான குறைப்பயன்பாட்டுக் காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்காக கடந்த ஜனவரி 12 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டு அமுலாக்க பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை, வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான மொத்தம் 247 ஹெக்டெயர் குறைப்பயன்பாட்டுக் காணிகள் அடையாளம் காணப்பட்டு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.