தேசிய ரீதியில் இடம்பெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை(27) இரவு யாழ் சுதுமலையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக சாதனையாளர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றதைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது.
அத்துடன் இளைஞர் யுவதிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்துகொண்டதுடன் , சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன கலந்து கொண்டார்.
அதேவேளை, யாழ்ப்பாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய ரீதியில் சாதனை படைத்த வடமாகாண விளையாட்டு வீரர்களுக்கு யாழில் கௌரவம்.samugammedia தேசிய ரீதியில் இடம்பெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை(27) இரவு யாழ் சுதுமலையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக சாதனையாளர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.பின்னர் வரவேற்பு நடனம் இடம்பெற்றதைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. அத்துடன் இளைஞர் யுவதிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டனர்.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்துகொண்டதுடன் , சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன கலந்து கொண்டார்.அதேவேளை, யாழ்ப்பாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.