Parl நிறுவனத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைகளுக்கான காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வட பிராந்திய சந்திப்பு இன்றையதினம் காலை யாழ் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Parl நிறுவனத்தின் இயக்குநர் சதுண் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஒருங்கிணைப்பாளராக பிரியங்கரவும் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் வடமாகாணத்தை சேர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடுஇ வடக்கிலுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த மக்களை உள்ளடக்கியதாக 6 பேர் இதன்போது உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆறுபேரும் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டத்தில் இடம்பெறும் உயர்மட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்றி அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.
அந்தவகையில் யாழ் மாவட்டத்திலிருந்து முரளிதரன் மற்றும் சாருஜனும் முல்லைத்தீவிலிருந்து கலைச்செல்வன், டயாணியும் மன்னாரிலிருந்து ரகீமும் கிளிநொச்சியிலிருந்து அச்சுதனும் வடமாகாண பிரதிநிதியாக முரளிதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது, இந்நிகழ்வுக்கு வந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால், 'வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க உதவுமாறும், வடக்கிலுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைகளை அகற்றுமாறும், தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்து தருதல், அபிவிருத்தி எனும் பெயரில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளை Parl நிறுவன அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாணத்தை சேர்ந்த பொது அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வட பிராந்திய சந்திப்பு. Parl நிறுவனத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைகளுக்கான காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் வட பிராந்திய சந்திப்பு இன்றையதினம் காலை யாழ் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.Parl நிறுவனத்தின் இயக்குநர் சதுண் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஒருங்கிணைப்பாளராக பிரியங்கரவும் கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் வடமாகாணத்தை சேர்ந்த மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடுஇ வடக்கிலுள்ள 5 மாவட்டங்களை சேர்ந்த மக்களை உள்ளடக்கியதாக 6 பேர் இதன்போது உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆறுபேரும் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டத்தில் இடம்பெறும் உயர்மட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்றி அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.அந்தவகையில் யாழ் மாவட்டத்திலிருந்து முரளிதரன் மற்றும் சாருஜனும் முல்லைத்தீவிலிருந்து கலைச்செல்வன், டயாணியும் மன்னாரிலிருந்து ரகீமும் கிளிநொச்சியிலிருந்து அச்சுதனும் வடமாகாண பிரதிநிதியாக முரளிதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.இதன்போது, இந்நிகழ்வுக்கு வந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால், 'வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க உதவுமாறும், வடக்கிலுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைகளை அகற்றுமாறும், தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்து தருதல், அபிவிருத்தி எனும் பெயரில் மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளை Parl நிறுவன அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.இந்நிகழ்வில் வடமாகாணத்தை சேர்ந்த பொது அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.