• Nov 24 2024

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை! 17 பேர் மரணம்

Chithra / Aug 25th 2024, 8:23 am
image

 

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35,727 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி மேல் மாகாணத்தில் 14,682 பேர் பதிவாகியுள்ளனர். 

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,722 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் டெங்கு நோயினால் பலியாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17 பேர் மரணம்  நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35,727 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணத்தில் 14,682 பேர் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,722 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் டெங்கு நோயினால் பலியாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement