• Apr 18 2026

பயணப்பொதியை வைத்துவிட்டு தப்ப முயன்றவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் - கட்டுநாயக்கவில் பரபரப்பு

Chithra / Apr 6th 2026, 12:10 pm
image

சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். 


இவர் இன்று காலை 06.50 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏஐ-277 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


குறித்த நபர் போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதியை விமான நிலையத்தின் பொதி வழங்கும் பகுதியில் கைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.


இதன்போது, பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோகிராம் 340 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.    

பயணப்பொதியை வைத்துவிட்டு தப்ப முயன்றவரை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் - கட்டுநாயக்கவில் பரபரப்பு சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் இன்று காலை 06.50 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏஐ-277 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.குறித்த நபர் போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதியை விமான நிலையத்தின் பொதி வழங்கும் பகுதியில் கைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.இதன்போது, பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோகிராம் 340 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement