• Mar 14 2026

பள்ளத்தில் கவிழ்ந்த எண்ணெய் லொறி; வெடித்துச் சிதறியதில் 35 பேர் உயிரிழப்பு!

shanu / Oct 23rd 2025, 12:59 pm
image

எண்ணெய் லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்துச் சிதறியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்தச் சம்பவம் நைஜீரியாவில் இன்று அதிகாலை சம்பவித்துள்ளது.  


நைஜர் மாகாணம், பீடாவிலிருந்து அகே நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று இன்று அதிகாலையில் பயணித்துள்ளது.  


பயணித்துக்கொண்டிருந்த லொறி அதிகாலை 4 மணியளவில் எசான் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து   கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 


எண்ணெய் லொறி விபத்திற்குள்ளானதில் எண்ணெய் ஓட ஆரம்பித்துள்ளது. இதையறிந்த அப் பகுதி மக்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டுச் சென்று  எண்ணெய்யை சேகரித்துள்ளனர். 


அதன்போதே  திடீரென அந்த எண்ணெய்  லொறி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. எண்ணெய் லொறி வெடித்துச் சிதறியதில் எண்ணெய் சேகரித்துக் கொண்டிருந்தவர்களில்  35 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.


எண்ணெய் சேகரிக்கச் சென்று விபத்தில் சிக்கிய 35 பேர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளத்தில் கவிழ்ந்த எண்ணெய் லொறி; வெடித்துச் சிதறியதில் 35 பேர் உயிரிழப்பு எண்ணெய் லொறி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்துச் சிதறியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நைஜீரியாவில் இன்று அதிகாலை சம்பவித்துள்ளது.  நைஜர் மாகாணம், பீடாவிலிருந்து அகே நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று இன்று அதிகாலையில் பயணித்துள்ளது.  பயணித்துக்கொண்டிருந்த லொறி அதிகாலை 4 மணியளவில் எசான் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து   கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. எண்ணெய் லொறி விபத்திற்குள்ளானதில் எண்ணெய் ஓட ஆரம்பித்துள்ளது. இதையறிந்த அப் பகுதி மக்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டுச் சென்று  எண்ணெய்யை சேகரித்துள்ளனர். அதன்போதே  திடீரென அந்த எண்ணெய்  லொறி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. எண்ணெய் லொறி வெடித்துச் சிதறியதில் எண்ணெய் சேகரித்துக் கொண்டிருந்தவர்களில்  35 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.எண்ணெய் சேகரிக்கச் சென்று விபத்தில் சிக்கிய 35 பேர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement