க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் ஒரு பேப்பர் பார்சலில் போடப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீட்டின் முடிவில் தூக்கி எறியப்பட்டு குப்பையாக வீசப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை பரீட்சை திணைக்களம் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்களை தவறு எனக் கருதி நிராகரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் தூக்கி எறியப்பட்டதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் தாமதத்திற்கு காரணம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குப்பைக் குவியலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஓ.எல் பரீட்டை விடைத்தாள்கள்.samugammedia க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் ஒரு பேப்பர் பார்சலில் போடப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீட்டின் முடிவில் தூக்கி எறியப்பட்டு குப்பையாக வீசப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.அதேவேளை பரீட்சை திணைக்களம் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்களை தவறு எனக் கருதி நிராகரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடைத்தாள்கள் தூக்கி எறியப்பட்டதே சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் தாமதத்திற்கு காரணம் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.