• Jun 29 2024

கோர விபத்தில் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர்..! அதிவேகத்தால் நேர்ந்த துயரம்

Chithra / Jun 26th 2024, 7:57 am
image

Advertisement

 

நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

கடவல பிரதேசத்தில் வைத்து, குறித்த முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெறுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை உட்பட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் விபத்துக்கு அதிக வேகமே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே, முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கோர விபத்தில் பறிபோன ஒன்றரை வயது குழந்தையின் உயிர். அதிவேகத்தால் நேர்ந்த துயரம்  நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.கடவல பிரதேசத்தில் வைத்து, குறித்த முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெறுள்ளது.விபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை உட்பட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இந்நிலையில் விபத்துக்கு அதிக வேகமே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே, முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement