• Oct 27 2026

ஒரு அழைப்பு..மூன்று மரணங்கள்! இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட டுபாயில் சிக்கிய பெண்

Chithra / Oct 27th 2026, 1:07 pm
image


ஹுங்கம பகுதியில் 'கஜ்ஜா' என அழைக்கப்படும் நபர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


'அச்சினி' என அழைக்கப்படும் அனோஷா லக்மாலி என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


மித்தெனிய, கடுவன பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், படுகொலை செய்யப்பட்ட 'கஜ்ஜா' என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறிப்பாக, கொலை இடம்பெறுவதற்கு முன்னர் 'கஜ்ஜா'வுக்குக் கிடைத்த இறுதித் தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி என்பவற்றை இந்தப் பெண்ணே அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும், 'பெக்கோ சமன்' என்பவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, 'கஜ்ஜா' மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் உணவருந்துவதற்காகக் குறித்த உணவகத்திற்கு தந்திரமாக வரவழைத்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு உணவகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டுபாயில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இதனையடுத்து, அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று டுபாய்க்குச் சென்றிருந்தது.


அதன்படி, இன்று அதிகாலை 5.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 விமானம் மூலம் சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரிடம் ஆரம்பகட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இந்த முக்கொலைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு அழைப்பு.மூன்று மரணங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட டுபாயில் சிக்கிய பெண் ஹுங்கம பகுதியில் 'கஜ்ஜா' என அழைக்கப்படும் நபர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.'அச்சினி' என அழைக்கப்படும் அனோஷா லக்மாலி என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.மித்தெனிய, கடுவன பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், படுகொலை செய்யப்பட்ட 'கஜ்ஜா' என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறிப்பாக, கொலை இடம்பெறுவதற்கு முன்னர் 'கஜ்ஜா'வுக்குக் கிடைத்த இறுதித் தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி என்பவற்றை இந்தப் பெண்ணே அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், 'பெக்கோ சமன்' என்பவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, 'கஜ்ஜா' மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் உணவருந்துவதற்காகக் குறித்த உணவகத்திற்கு தந்திரமாக வரவழைத்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.அவ்வாறு உணவகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டுபாயில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனையடுத்து, அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று டுபாய்க்குச் சென்றிருந்தது.அதன்படி, இன்று அதிகாலை 5.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 விமானம் மூலம் சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவரிடம் ஆரம்பகட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இந்த முக்கொலைச் சம்பவத்தின் பின்னணி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement