கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பின்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹள கோரளை மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கின்றது.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (04) மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடரும் மண்சரிவு அபாயம்: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை - பாடசாலைகள் மூடல் கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவிப்பின்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹள கோரளை மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கின்றது.இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (04) மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார்.மேலும், சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.